வீட்டில் சாதம் மீந்துவிட்டதா? 10 நிமிடத்தில் சுவையான இட்லி செய்து சாப்பிடலாம்
தென்னிந்தியர்களின் காலை உணவில் முக்கியமான இடம்பிடித்திருப்பது இட்லி, சுடச்சுட இட்லிக்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதியானது.
இந்த பதிவில் மீந்து போன சாதத்தில் இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாதம் - 11/2 கப்
ரவை- 1 கப்
தயிர்- 1 கப்
தண்ணீர்- 1 கப்
உப்பு- அரை டீஸ்பூன்
சோடா உப்பு- அரை டீஸ்பூன்
செய்முறை
ஒன்றரை கப் சாதத்துடன், ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
நைசாக அரைத்து எடுத்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும், கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ரவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
சூடு ஆறியதும் அரைத்து வைத்த மாவுடன் கலந்து கொள்ளவும், இதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
மூன்றிருந்து ஐந்து நிமிடங்கள் கிளறியதும், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிட்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் சுவையான இட்லி தயாராகிவிடும்!!!