மதியம் மீந்து போன சாதம் இருக்கா? இப்படி செய்தால் கொஞ்சம் கூட மீதம் இருக்காதாம்
மதியம் மீந்து போன சாதத்தினை ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு முட்டை ப்ரைடு ரைஸாக மாற்றுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சைனிஸ் வகை உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதிலும் இரவு நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை ப்ரைடு ரைஸ், சிக்கன் இவைகள் தான் பிரதான உணவாக இருக்கின்றது.
இவ்வாறு கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகள் சில வேளைகளில் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இறுதியில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் மதியம் வைத்த சாதம் மீந்து போய்விட்டால் அதனை இரவு நேரத்திற்கு ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு முட்டை ப்ரைடு ரைஸ் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
முட்டை - 4
மிளகுத் தூள் - 1 டீஸ்ழுன்
பூண்டு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நீளவாக்கில் நறுக்கியது)
கேரட் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (நீளவாக்கில் நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சாதம் - 2 கப்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
வாணலியினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி மிளகுதூள், உப்பு தூவி வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து பொடியாக வெட்டிவைத்த பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். தொடர்ந்து குடைமிளகாய், கேரட், முட்டை கோஸ் இவற்றினை சேர்த்து சிறிது உப்பு தூவி 3-4 நிமிடம் காய்கறிகளை வதக்கவும்.
அதன் பின் அதில் சாதத்தை சேர்த்து, அதோடு சோயா சாஸ், மிளகுத் தூள், ஸ்பிரிங் ஆனியன் மற்றும் வதக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் முட்டை ப்ரைடு ரைஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |