சாதம் மீந்து போய்விட்டதா? மொறு மொறு வடகம் செய்யலாம்
வீட்டில் சாதம் மீந்து போய்விட்டால் அதனை வெளியே கொட்டாமல் வடகமாக எவ்வாறு மாற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ் தான் வடகம். சைவ மற்றும் அசைவ குழம்புகளுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
வடகத்தை கடைகளில் வாங்குவதை விட வீட்டில் செய்வது மிகவும் நல்லது. அந்த வகையில் மீந்து போன சாதத்தினை எவ்வாறு வடகமாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சாதம்
உப்பு - சுவைக்கேற்ப
சீரகம் - தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
பழைய சாதத்தினை தண்ணீரை பிழிந்து பாத்திரம் ஒன்றில் போட்டுக்கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
காரத்திற்கு ஏற்ப சிகப்பு மிளகாய் பொடியை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் பிசைந்து வைத்துள்ள சாத கலவையை சிறிய சிறிய வடக வடிவில் வைக்கவும்.
இதனை வெயிலில் காய வைத்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வது வைத்தால் நீண்ட நாட்களுக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |