மீந்து போன சப்பாத்தியில் சில்லி சப்பாத்தி... வெறும் 10 நிமிடம் போதும்
வீட்டில் மீதமான சப்பாத்தியை எவ்வாறு சில்லி சப்பாத்தியாக மாற்றுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி - 5
எண்ணெய் - 4 ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பீட்சா சாஸ் - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
மீதமான சப்பாத்தியை சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் பொடி கலந்து அதனுடன் சப்பாத்தியை போட்டு சிறிது பொரித்து எடுத்துக்கொள்ளவும். மொறுமொறுப்பு பிடிக்கவில்லை எனில் இவ்வாறு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் உள்ள மசாலாவை நன்றாக துடைத்து எடுத்த பின்பு அதில் எண்ணெய் சேர்க்கவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்கவும்.

சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிய பின்பு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கியவுடன், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

பீட்சா சாஸ், மல்லி பொடி மற்றும் கரம்மசாலா சேர்த்து கலந்துவிட்ட பின்பு, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். கடைசியாக தேவையான அளவு சேர்த்து கிளறி இறக்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |