இப்படியெல்லாமா விடுப்பு கேட்பது.. உயர் அதிகாரிக்கு வாட்ஸ் அப் மூலம் ஊழியர் சொன்ன அதிர்ச்சி காரணம்!
இதுவரை யாருமே கேட்காத வகையில் ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஊழியருக்கு பதவி உயர்வும், சம்பளமும் உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அந்த ஊழியர் மது அருந்தி கொண்டாடியுள்ளார்.
இதையடுத்து, ஓவராக மது அருந்தியதால், அடுத்த நாள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விடுப்பு கோரி தனது உயர் அதிகாரிக்கு வாட்ஸ் ஆப் மூலம், அளவுக்கு அதிகமாக குடித்ததால், ஒரு நாள் விடுப்பு வேண்டும் என அனுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவர், நீ அதற்கு முழு தகுதியுள்ளவர், விடுப்புக்கான ஒரு சிறந்த காரணத்தை பதிவு செய்துள்ளீர்கள் என பதிலளித்து விடுப்பும் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என குறிப்பிடபடவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.