காய்ந்த இலை வடிவத்தில் பார்ப்பவர்களை ஏமாற்றிய பல்லி! பல வருட முயற்சியில் எடுக்கப்பட்ட வைரல் காட்சி
காய்ந்த இலை போல் இருக்கும் பல்லியின் வீடியோக்காட்சி இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
படைப்புகள்
பொதுவாக நாம் அன்றாடம் பார்க்கும் சில உயிரினங்கள் அவைகளுக்கே உரிதான சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இதனையே நாம் ‘உருமறைப்பு’என்ற சக்தியை என்று அழைக்கிறோம்.
உயிரினங்கள் அது வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் பண்புகள், உணவுகள் என அனைத்து விடயங்களை மாற்றிக் கொள்கின்றது.
அந்த வகையில் பல்லி, பஞ்சோந்தி இதன் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இவ்வாறு மாறுவதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உணவும், பாதுகாப்பும் தான்.
காய்ந்த இலை வடிவில் கேமராவில் சிக்கிய பல்லி
அப்படி ஒரு வித்தியாசமான உயிரினமாக இனங்காணப்பட்ட உயிரினம் தான் இலை வால் பல்லி.
பார்ப்பதற்கு காய்ந்த இலை போல் இருக்கும் இந்த பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது.
இந்த பல்லி காய்ந்த மரங்கள், இலைகள் ஆகிய இடங்களில் வசிக்கின்றது. மேலும் பார்ப்பதற்கு இலைப்போல் இருப்பதால் கண்டுபிடிக்கவே முடியாது.
இதன் நீளம் சுமாராக10 முதல் 30 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதனை அவ்வளவு இலகுவாக நேரில் காணமுடியாது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்க்கும் போது இலை போல் இருப்பதால் நெட்டிசன்கள,“ கடவுளின் படைப்புகள் முற்றிலும் வித்தியாசமானவை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Looks very cool!
— Figen (@TheFigen_) May 20, 2023
The Fantastic Leaf-tailed Gecko or Satanic Leaf-tailed Gecko.
It lives in Madagascar and it is the smallest of the geckos.pic.twitter.com/h3005TBQDq