பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? காலை உணவின் போது செவிலியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
நாம் பெரும்பாலும் ஓட்டல்கள், கடைகளில் சாப்பிடும் உணவுகள் சுவையாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பது கேள்வி குறியே.
இதற்கு நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் செளமிய நாராயணபுரம் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது.
இங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் செவிலியர்கள் என 5 பேருக்கு காலை உணவு தனியார் உணவகத்தில் வாங்கி வழங்கப்பட்டு உள்ளது. இந்த உணவை முதலில் மூன்று பேர் சாப்பிட்டு உள்ளனர்.
செவிலியர் ஒருவர் சாப்பிடும் போது உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மற்ற இருவரையும் தடுத்து உள்ளார். இருப்பினும் உணவருந்திய, உதவி மருத்துவ செவிலியர் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், கூட்டுறவு துறை அலுவலர் குழந்தை ஆகியோருக்கு வாந்தி மயக்கம் வந்ததை அடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்த எழுந்த புகாரின் பேரில், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சமைக்கப்பட்ட உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?
- பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் உணவு விஷமாகுமாகும்.
- பல்லி உணந்த உணவுகளை சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும் வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்துகிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்கும், அது பற்றிக் கேட்டவருக்கும் பயம் தொற்றும்.
- இதனால் ஏற்படும் அருவருப்பாலும், பல்லி பற்றிய மரண பயத்தாலும், பதற்றத்தாலும்தான் வாந்தி ஏற்படுகிறது.
- அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதோடு, உணவு கெட்டுப்போயிருந்தாலும், வாந்தி ஏற்படுவது இயற்கையே.
-
அதிகப்படியான வாந்தியால் ஏற்படும் டிஹைட்ரேஷனால் மயக்கம் உண்டாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்குப் பரிந்துரைக்கிறார்கள்.
மற்றபடி உயிரிழப்பு என்கிற அளவுக்கு பயப்படத் தேவையில்லை.