நயன்தாரா, கீர்த்திசுரேஷ்... சினிமாவில் நடிக்கும் முன் இந்த வேலை தான் செய்தார்களா?
தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் நடிப்பதற்கு முன்னர் தொலைக்காட்சியில் செய்த வேலைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முன்னணி கதாநாயகிகள்
தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மலையாள தொலைக்காட்சியில் சமயம் என்ற ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் தான் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இதற்கு முன்னர் மலையாளத்தில் சந்தான கோபாலம், கிருஷ்ண கிருபா சாகரம் போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன் நடிப்புப் பயணத்தை ஆரம்பித்தார். இதன் பின் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பல காதல் திரைப்படங்களை நடித்து மக்கள் மனதில் இடம்பித்த மிருணாள் தாகூர் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னர் இந்தியில் கும்கும் பாக்யா, அர்ஜுன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் கதாநாயகியாக நடிக்க முன்னர் சோட்டி மா ஏக் அனஹோ பந்தன் என்னும் இந்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
காக்கா முட்டை படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன், தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இதன் பின்னர் மானடா மயிலாடா நிகழ்ச்சியில் சீஷன் 3 வின்னர் பட்டத்தை வென்றார்.
வாலிபர்களின் மனதை வருடிய கதாநாயகி தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் தமிழில் வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது போன்ற படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பதற்கு முன்னர் மூன்று வயதில் ருத்ராகாலு என்ற தெலுங்கு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
