மேடையில் கண்டுகொள்ளாத நயன்தாரா? மீனா கொடுத்த தரமான பதிலடி
பட பூஜையின் போது நயன்தாரா நடந்து கொண்ட விதத்திற்கு மீனா பதிலடிக் கொடுக்கும் வகையில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை மிக பிரமாண்டமாக நடந்தது.
அந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். 90கள் காலப்பகுதியில் அம்மனாக மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து அம்மன் கெட்டப்பில் நயன்தாரா நடித்திருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் அம்மனாக மாறிய நயன்தாரா, அதன் இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் சுந்தர் சி எடுக்கவுள்ளார்.
மேலும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
நடிகை மீனா கொடுத்த பதிலடி
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பட பூஜையில் கலந்து கொண்ட மீனா, நடிகை குஷ்பூவுடன் இருக்கும் பொழுது நயன்தாரா, குஷ்பூவை மாத்திரம் அழைத்து பேசினார். மீனாவை பார்த்து சிரிக்க கூட இல்லை.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய சமயத்தில், நயன்தாராவின் செயலை கவனித்த நெட்டிசன்கள், “இது நயன்தாராவின் திமிரு, நயன்தாரா பேசியிருப்பார் நமக்குதான் தெரியவில்லை ஆகிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கு சரியான பதிலடிக் கொடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மீனா பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு சிங்கம், ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பதை பற்றி கவலைப்படாது, உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள். அனைவரிடமும் இந்த பண்பு இருக்காது...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன்,“இந்த பதிவு நயன்தாராவுக்கு தான்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |