கெட்ட கொழுப்புகள் கடகடவென குறையனுமா? இந்த உணவுகள் சாப்பிட்டாலே போதும்
உடம்பில் இருக்கும் LDL என்ற கெட்ட கொழுப்பை நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும் என்று கூறப்படுகின்றது.
கெட்ட கொலஸ்ட்ரால்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகமாக இருந்தால் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
Low-density lipoprotein cholesterol (LDL) பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் எனவும், High-density lipoprotein cholesterol (HDL) என்பது நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு HDL அளவு சீராக இருக்கும் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கச் செய்து, LDL அளவை குறைக்க உதவும் ஏழு உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்
தானியங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஃபைபர் உள்ளதால், இவை கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் பாதுகாக்கின்றது.
அதிக சத்துக்களைக் கொண்ட நட்ஸ் வகைகள், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. நமது ரத்தத்தில் triglycerides என்ற கொழுப்பு அதிகம் இருந்தால் இதய நோய், பக்கவாதம் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
மீன்களை சாப்பிட்டாலும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சால்மன் உள்ளிட்ட மீன்களை சாப்பிடும் போது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதுடன், நல்ல கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கின்றது.
அவகோடாவில் ஒற்றை நிறைவுள்ள கொழுப்புகள் மற்றும் ஃபைபர் உள்ள நிலையில், இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதுடன், நல்ல கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்கின்றது.
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட பூண்டு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு உதவுகின்றது.
நாம் அன்றாடம் உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகின்றது.
polyphenols என்ற இரசாயன மூலக்கூறுகள் கொண்ட டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |