White Sauce Pasta: குழந்தைகளுக்கு பிடித்தமான ஒயிட் சாஸ் பாஸ்தா
பொதுவாக குழந்தைகள் இரவு மற்றும் காலை வேளைகளில் சாதம் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் மிகக் குறைவு.
அதே சமயம், இரவு வேளைகளில் நூடில்ஸ், பாஸ்தா, சாப்பாத்தி, தோசை உள்ளிட்ட இலகுவான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
மருத்துவ தகவல்களின் படி இது போன்ற உணவுகளை தான் சாப்பிட வேண்டும்.
இதன்படி, வீடுகளில் பிள்ளைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஒயிட் சாஸ் பாஸ்தாவை செய்து கொடுத்தால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான ஒயிட் சாஸ் பாஸ்தா எப்படி செய்யலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* பாஸ்தா - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
வதக்குவதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* சிறிய குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பேபி கார்ன் - சிறிது
* உப்பு - சிறிது ஒயிட்
சாஸிற்கு தேவையான பொருட்கள்
* வெண்ணெய் - 4 டீஸ்பூன்
* மைதா - 3 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* ஆரிகனோ - 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாஸ்தாவிற்கு தேவையான அளவு தண்ணீர் வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒருமுறை பாஸ்தாவை அலசி விட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், பேபி கார்ன் மற்றும் உப்பு சேர்த்து வதங்கிக் கொள்ளவும்.
அதனை ஒரு தட்டி கொட்டிய பின்னர், மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய், மைதா சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அந்த கலவையுடன் காய்ச்சி தனியாக வைத்திருக்கும் பாலை வாணலியில் ஊற்றவும். இந்த கிரீமை மிதமான வெப்பநிலையில் செய்ய வேண்டும்.
மீதமாக இருக்கும் பாலை ஊற்றிய சாஸ் பதத்திற்கு வரும் வரை கிளறி விடவும்.
கடைசியாக சாஸில் வேக வைத்துள்ள பாஸ்தாவை கொட்டி, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளை கொட்டி கிளறினால் சுவையான ஒயிட் பாஸ்தா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |