இரவில் தூக்கம் வராமல் தவிர்ப்பவரா நீங்கள்? லாவெண்டர் எண்ணெய் செய்யும் அற்புதம்
நமக்கு பெரும்பாலும் தெரிந்த எண்ணெய் வகைகள் என்றால், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை தான்.
அழகிய ஊதா வண்ணத்தில் பல நன்மைகளை தரக்கூடிய லாவெண்டர் எண்ணெய் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இந்த லாவெண்டர் எண்ணெயானது பல விடயங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.
தலைவலியை போக்குகிறது
தலைவலி ஏற்படும்போது இந்த லாவெண்டர் எண்ணெயில் ஒரு சொட்டை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டால் வலி நீங்கும்.
மன அழுத்தம் குறையும்
பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் பண்புகள் இந்த எண்ணெய்க்கு உண்டு.
முகத்துக்கு
லாவெண்டர் எண்ணெயை மொய்ஸ்சரைசருடன் கலந்து முகத்தில் தடவினால், முகம் மிருதுவாக இருக்கும். பருக்கள் வராது.
தூக்கம் வர
உறங்குவதற்கு முன்பு தலையணையின் இருபுறமும் 2 சொட்டு விட்டு உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.