சிரிக்கும் புத்தர் சிலை... எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சிரிக்கும் புத்தர் சிலையினை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிரிக்கும் புத்தர் யார்?
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவே தாக்கத்தினை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பலரது வீடுகளில் சிரிக்கும் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும். இவை வீட்டில் வைத்திருந்தால் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
ஜப்பானிலிருந்து வந்த ஹோதை என்ற பெண் பௌத்த மதத்திற்கு மாறியநிலையில், நெடுங்காலம் தவம் செய்து ஞானோதயம் பெற்றுள்ளார். அவர் அவ்வாறு ஞானம் பெற்ற போது சத்தமாக சிரிக்க ஆரம்பித்ததுடன், பின்பு மக்களை சிரிக்க வைப்பதையே குறிக்கோளாக வைத்து பல நாடுகளுக்கும் சென்று சிரிக்க வைத்துள்ளார். அவரே சிரிக்கும் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.
இரண்டாவதாக கூறப்படும் காரணம் எனனவெனில், சிரிக்கும் இந்த புத்தர் அதிர்ஷட கடவுள் ஏழுபேரில் ஒருவராக ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் நம்புகின்றனர். மேலும் வீட்டில் இந்த சிலையை வைத்தால், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதுடன், மன அமைதியும் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
எந்த திசையில் வைக்க வேண்டும்?
குறித்த சிலையை கிழக்கு திசையை நோக்கி வைப்பதும் மங்களகரமானதாக கருதப்படுவதுடன், வீட்டில் இந்த சிலை இருந்தால் குழந்தைகளின் மனது படிப்பில் நன்றாகவும் ஈடுபடுமாம்.
படுக்கையறை, சாப்பிடும் அறை, வரவேற்பு அறைகளில் தென்கிழக்கு தியைில் வைத்தால், அதிர்ஷ்டமும், வருமானமும் கூறுவதுடன், வீட்டில் எதிர்மறை ஆற்றல் முடிவுக்கு வருமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |