நீங்களும் பணக்காரர் ஆகலாம்!!! இந்த பொருட்களை வாங்கி உங்க வீட்டில் வைங்க போதும்
வீட்டில் அழகு கூடுவதற்காக பலபேர் அழகிய வடிவத்திலான சிலைகளையும் அலங்கார பொருட்களையும் வைப்பர்.
அவற்றுள் ஒருசில வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும்,சிலது எதிர்மறை ஆற்றலையும் தரும்.
ஆகையால் வீட்டிற்கென அலங்கார பொருட்களை வாங்கும்போது அதற்கான பலனறிந்து வைப்பது சாலச்சிறந்தது.
உலோக சிலைகள்
உலோக யானைகள் அல்லது உலோக சிலைகள் வீட்டில் வைப்பதால் அது நேர்மறை எண்ணங்களை, நேர்மறை ஆற்றல்களை கொடுக்கிறது.அத்தோடு செல்வம் மகிழ்ச்சி பெருகவும் உதவும்.எந்த வீட்டில் யானை உள்ளதோ அங்கு லட்சுமி தேவி குடிபுகுவாள் என்பது நம்பிக்கை.
சிரிக்கும் புத்தர் சிலை
சிரிக்கும் புத்தர் சிலை என்பது சீனா மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை ஒன்றாகும்.தங்க நிறத்தில் காட்சியளிக்கும் இச்சிலையை வரவேற்பறையிலோ அல்லது வீட்டில் தெற்கு திசையில் இருக்கும் இடங்களிலோ வைக்கும்பொழுது அது அதிர்ஷ்டத்தை,பணவரவை, துன்பத்தை நீக்கி நல்ல ஒரு மாற்றத்தை உண்டாக்கும் . இதனை சீனர்கள் இதை அதிர்ஷ்டத்தின் மறு வடிவமாகவே கருதுகின்றனர்.
பசுவின் சிலை
பசுவின் சிலையும் ஒரு நல்ல நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் ஒரு பொருளாகவும் காணப்படுகிறது. எல்லா கடவுளும் குடியிருக்கும் ஒரு சிலையாகவும்இருப்பதால் இதை வீட்டில் வைப்பதால் நிதிநிலை,பணவரவு,வீட்டில் உள்ள எதிர்மறை தாக்கங்கள் நீங்கும்.மங்களகரமான ஒரு சிலையாகவும் இது காணப்படுகிறது.
ஓடும் குதிரை சிலை
ஓடும் குதிரை சிலை வலிமையையும்,வெற்றியையும் வீட்டில் வைப்பது வீட்டில் உள்ளோருக்கு நல்ல முன்னேற்றத்தை தருகிறது.பெரும்பாலும் 7 குதிரைகள் ஓடுவது போல இருக்கும் படத்தினை வீட்டின் தெற்கு திசையில் மாட்டுவது அதிர்ஷ்டத்தையும், வலிமையையும் தரும்.
அதிர்ஷ்ட மீன் சிலை
அதிர்ஷ்ட மீனும் பொதுவாக சீனர்கள் மூலமே நமக்கு அறிமுகமாகியது.அவர்கள் இதனை அதிர்ஷ்டம் மற்றும் நன்மையளிக்கும். இதனை வீட்டில் வைப்பது பணவரவை பெருக்கும் மற்றும் நன்மை அளிக்கும். நாம் சிலைகள் என பார்க்கும்போது அதனை எத்திசையையில் வைப்பது என கவனமாக கருத்திற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட மீனை வட கிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் நன்று.