நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்!
பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் இன்று காலமானார். ஹிந்தி, மராத்திய மொழிகளில் தனக்கென தனி இடத்தை பதித்தவர் நானா படேகர், அவருக்கு வயது 75. இவர் தமிழில் வெளியான பொம்மலாட்டம், காலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கோவாவில் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை சுயநினைவை இழந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இணையத்தை ஆக்கிரமிக்கும் இறுதி வார்த்தைகள்
இந்நிலையில், உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நானா படேகர் பொதுவெளியில் பேசிய வார்த்தைகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த அக். 4ஆம் தேதி கோவாவின் டோனா பவுலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நானா படேகர் கலந்து கொண்டிருந்தார். அப்போது மராத்தி மொழியில் பேசிய அவர், “நாம் அனைவரும் ஒரு நாள் இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்.

நாளை நான் இங்கு இருப்பேனா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர் பேசிய இந்த வார்த்தைகள், தற்போது அவரது மரணம் தொடர்பான செய்திகளுடன் இணைத்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அவர் நான்கு நாட்களுக்கு முன்பு பேசிய காணொளி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எதிர்பாராத வகையில் சில நாட்களிலேயே அவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |