அழகான ராட்சசியே! பொங்கல் விருந்தாக லாஸ்லியா வெளியிட்ட வீடியோ வைரல்
பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா அவருடைய ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் பிரபலம்
லாஸ்லியா மரியநேசன் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் இவரின் குடும்ப , சூழலின் காரணமாக தனது 18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக இலங்கை ஊடகமொன்றில் பணியாற்றினார்.
இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ளார். இதில் கலந்துக் கொண்ட போது சீரியல் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுக்கள் எழ, வெளியில் வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன.
இதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், ஆனால் இந்த திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியை தரவில்லை. ஆனாலும் தற்போதும் கூட சில திரைப்படங்கில் நடித்து வருகிறார்.
மேலும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
பொங்கல் தின வாழ்த்துக்கள்
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் கொலு கொலுவென இருந்த லாஸ்லியா, தற்போது எலும்பும் தோலுடன் பொங்கல் பண்டிகைக் கொண்டாடியுள்ளார்.