12 ஆண்டுகளின் பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: மூட்டைகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்
ஜோதிட சாஸ்தித்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
சில சமயங்களில் இரண்டு கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய யோகங்களால், குறிப்பிட்ட சில ராசியினருக்கு அபரிமிதமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், 12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் கிரகங்களின் இளவரசனான புதனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் இணைவதால், லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப்போகின்றது.
அதனால் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசியினருக்கும் பண ரீதியில் அசுர வளர்ச்சி நிகழப்போகின்றது. அப்படி பண மழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியினருக்கு 2025 இல் உருவாகவுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம் வாழ்வில் மிகப்பெரும் ஏற்றத்தை கொடுக்கப்போகின்றது.
இந்த ராசியினருக்கு தொழில் விடயங்களில் எதிர்பார்த்ததை விடவும் அதிக முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும்.
வியாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு இந்த லட்சுமி நாராயண ராஜயோகம் பெரியளவில் லாபத்தை பெற்றுத்தரும்.
பணியிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த லட்சுமி நாராயண ராஜயோகம் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை கொடுக்கும்.
இவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் தெளிவான திட்டதிடலின் விளைவாக மிகப்பெரும் சொத்துக்கு அதிபதியாகும் யோகம் அமையும்.
அதிர்பாரத வகையில் பெரியளவில் பணப்பரிசு பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது. தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியில் 10 ஆம் வீட்டில் உருவாகவுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம் 2025 ஆம் ஆண்டு முழுவதும் இவர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும்.
இவர்கள் அடுத்த ஆண்டின் இறுதி வரையில் பணத்துக்கு பஞ்சமே இல்லாமல், ஆடம்பர வாழ்க்கை வாழும் வாய்ப்பை பெறுவார்கள்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் ராஜயோகம் அவர்களுக்கு அசுர வளர்ச்சியை கொடுக்கும். அதிகாரம் மிக்க உயர்பதவியில் அமரும் வாய்ப்பு கூடிவரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |