என்னிடமிருந்து எஸ்கேப்பான நடிகர் இவர் தான்! முக்கிய ஆதாரத்தை இணையத்தில் பரவவிட்ட லைலா!
பிரபல நடிகை லைலா சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் 90கள் காலப்பகுதியில் சிறந்த நடிகையாக பட்டிதொட்டியெங்கும் தேடப்பட்டவர் தான் நடிகை லைலா.
இவரின் சிரிப்பிற்காகவே தமிழ்நாட்டில் பலக்கோடி ரசிகர்கள் இருந்தார்கள். தொடர்ந்து பிரசாந்த், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஆனால் தற்போது இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயுடன் நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை லைலா தன்னிடம் இருந்து எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ விஜய் என தெரிவித்துள்ளார்.
ஆதாரம்
“ உன்னை நினைத்து” என்ற படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்கவிருந்தவர் விஜய்தானாம். லைலாவுடன் இணைந்து போட்டோ ஷீட் கூட செய்து கொண்டார்களாம்.
இதனை தொடர்ந்து விஜய் திரைப்படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டாராம்.
அதற்கு பதிலாக தான் சூர்யா கமிட்டாகி அவ்வளவு பெரிய ஹீட் கொடுத்தார். இதன்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விஜயிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய லைலா,“ என்னிடமிருந்து தப்பித்தஒரே நடிகர் இவர் தான்..” என கூறியுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், உன்னை நினைத்து படத்தில் விஜய் நடித்திருந்தால் இன்னும் ஹிட்டாகியிருக்கும் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.