இளைய தளபதி வீட்டிற்கு அருகில் பல கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய பிரபலம்! ஏன் தெரியுமா?
விஜயின் வீட்டிற்கு அருகில் பல கோடி ரூபாய் கொடுத்து நடிகை த்ரிஷா வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் ஆரம்பக்காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் , அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தனவசப்படுத்தி வைத்துள்ளார்.
மேலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளமே இன்று வரை இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜயுடன் சுமார் இரண்டு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பல கோடி ரூபாய் பெருமதியான வீடு
இந்நிலையில் இளைய தளபதியின் வீடு நீலாங்கரை இருக்கிறது. அதில் அவர் தங்களின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
மேலும் விஜயின் வீடு பார்ப்பதற்கு 4 அரண்கள் மாதிரியான சுவர்கள் உள்ளே யாரும் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.
இதனை தொடர்ந்து நடிகை த்ரிஷா விஜய்யின் வீட்டின் அருகிலுள்ள வீட்டை சுமார் ரூ. 35 கோடி மதிப்பு கொண்ட பணத்தை கொடுத்து வாங்கியுள்ளாராம்.
புதிய திரைப்படம்
இந்த வீட்டை வாங்கும் முன்னர் அஜித் வீட்டிற்கு அருகாமையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஃபிளாட் ஒன்றை வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி நிலையில், தற்போது புதிய வீட்டை வாங்கிவிட்டாராம்.
மேலும் மீண்டும் இவர் விஜயுடன் இணைந்து 67 படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி நிலையில்
சமீபத்தில் இவர் படத்தின் பூஜையிலும் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.