இயக்குநராக கால்பதிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...! ரசிகர்களின் குவியும் பாராட்டுகள்
நடிப்பு, பிசினஸ், பட தயாரிப்பு, என கலக்கிக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார் என்பதை அவரே புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது.
கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா திரையுலகில் நடிகையாக மட்டுமே இல்லாமல், ரௌடி பிச்சர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், வெற்றி நடை போட்டு வருகிறார்.
அது மட்டும் இன்றி லிப் பாம், ஸ்கின் கேர், நாப்கின், ஸ்டாட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த உள்ளார். நடிகையாகவும், தொழிலதிபராகவும், மட்டுமன்றி சிறந்த குடும்ப தலைவி என்றும் பெயரெடுத்த நயன்தாரா தற்போது, தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு போட்டியாக திரைப்பட இயக்கத்திலும் கால் பாதிக்க உள்ளார்.
இதனை உறுதி செய்யும் விதத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "புதிய தொடக்கங்களில் மேஜிக்கை நம்புங்கள்" என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை நயன்தாராவுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால் என்ன படம், இப்படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |