மயக்கத்தில் சுயநினைவியை இழந்த பெண் பொலிஸ்: சப் இன்ஸ்பெக்டர் செய்த மோசமான காரியம்
பெண் பொலிசாரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் நபர் ஒருவரின், கண்காணிப்பில் இருந்த காவல்நிலையத்தில் பெண் பொலிஸ் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த பெண் போலீஸ் இளம் வயது பெண் என்பதாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு உயரதிகாரியான அந்த சப் இன்ஸ்பெக்டரால் ஆபத்து ஏற்பட்டடுள்ளது.
குறித்த அதிகாரி, பெண் பொலிஸை ஒருநாள் டெல்லியின் முன்றிகா பகுதிக்கு அழைத்துச் சென்றதோடு, மயக்கம் கலநத குளிர்பானத்தினையும் கொடுத்துள்ளார்.
அதை வாங்கி குடித்த, பெண் பொலிஸ் சுயநினைவை இழந்து மயக்கத்திற்கு சென்ற நிலையில், குறித்த அதிகாரி அப்பெண்ணை வன்கொடுமை செய்து அவரை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
பின்பு மயக்கம் தெளிந்த பெண் பொலிசாரிடம் குறித்த புகைப்படங்களை காண்பித்து இதனை வெளியே கூறினால் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதனால் அந்த பெண் பொலிஸ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியதுாடு, சப் இன்ஸ்பெக்டர் குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.