செருப்பால் அடித்து சிதைக்கப்பட்ட பெண்: அவசர ஹெல்ப் லைன் அதிகாரிக்கு நடந்த அவலம்
புகுந்த வீட்டினர் ஒரு பெண் அதிகாரியை வரதட்சணை கேட்டு செருப்பால் அடித்து கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் ஒருங்கிணைந்த அவசர ஹெல்ப்லைன் ‘112’ இன் தகவல் தொடர்பு அதிகாரியாக ஒரு பெண் பணிபுரிந்து வந்தார்.
அந்த பெண் கடந்த 2014ம் ஆண்டில் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டதோடு, தற்போது அவருக்கு பெண் குழந்தையும் இருக்கின்றது.
குறித்த பெண் அதிகாரியை அவரின் கணவர் திருமணமான நாள் முதல் வரதட்சணை கொடுமை செய்து வந்ததோடு, இதற்கு மாமியார் மற்றும் மாமனார் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.
கணவர் குடும்பத்தினரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகமானதால் கடந்த 2016ம் ஆண்டில் அங்குள்ள காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அறித்துள்ளார்.
அப்பொழுது சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பின்பு மீண்டும் கணவரின் குடும்பத்தினர் கொடுமையை ஆரம்பித்ததால், தனது தாயார் வீட்டிற்கு சென்று வசித்துள்ளார்.
பின்பு சில மாதங்களுக்கு கழித்து தனக்கு சீராக கொடுத்த நடிகையினை திருப்பிக்கேட்டுள்ளார். அப்போது நகையினைக் கொடுக்காமல் குறித்த பெண்ணை செருப்பால் அடித்து உடலில் பல இடங்களை காயப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண் அங்கிருந்த காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்ததையடுத்து, வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.