'சர்வைவர்' நிகழ்ச்சி நிறுத்தப்படுகின்றதா? திடீரென வெளியேறிய போட்டியாளர் உடைத்த பல உண்மைகள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி இன்னும் 8 நாட்களில் முடிய உள்ளதாக அந்நிகழ்ச்சியின் போட்டியாளரான லேடி காஷ் கூறியுள்ளார்.
தற்போது மிகவும் வித்தியாசமாக எடுக்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படும் நிலையில், ஜீ தொலைக்காட்சி சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியினை ஒளிபரப்பாகி வருகின்றது. இதனை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படும் முறையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இந்நிலையில் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட லேடி காஷ் பரபரப்பு வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
இக்காட்சியில், குறித்த நிகழ்ச்சியிலிருந்து வேறு வழியே இல்லாமல் வெளியேறியுள்ளதாக உணர்ச்சிவசம் பொங்க பேசியுள்ளார். குறித்த காணொளியினை அவதானித்தால் சர்வைவர் நிகழ்ச்சியில் மிகப்பெரிய பிரச்சினை எழுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.