கொரோனா தடுப்பூசி போட்ட பின் கேவி ஆனந்த் திடீர் மரணம்!!!
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், வடமாநிலங்களில் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர்.
உருமாற்றம் அடைந்த இந்த கொடிய கொரோனா வைரஸ் மிக எளிதில் நுரையீரலை தாக்குகிறது, மூச்சுத்திணறலால் நோயாளிகள் அவதிப்படும் போது போதிய ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் அவலநிலை இருக்கிறது.
டெல்லி போன்ற மாநிலங்களில் இரவு, பகலாக சடலங்கள் எரிந்து கொண்டிருப்பதால், உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு பயணத்தடை விதித்துள்ளன.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர், இருப்பினும் தடுப்பூசி மீது மக்களுக்கு பல சந்தேகங்களும் இருக்கின்றன.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளை சின்ன கலைவாணர் விவேக் மரணமடைந்ததும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது முடிவதற்குள், பிரபல இயக்குனரான கேவி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார், இவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
கேவி ஆனந்த்துக்கும் தொற்று உறுதியாக, சுயதனிமைப்படுத்தலில் இருந்துள்ளார், இந்நிலையில் நேற்றிரவு மூச்சு விட முடியாமல் சிரமப்படவே, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும், திடீர் மாரடைப்பால் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார், இச்செய்தி அவரது ரசிகர்களையும், தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கிடைய கேவி ஆனந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதும், இரண்டாவது டோசுக்காக காத்திருந்த போது இத்துயர் மிகுந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்துள்ளது.
