விருந்தினராக வந்த இரட்டை பாப்பா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் சூரி குடும்பம்....மகள் செய்த வேலைய பாருங்க
நடிகர் சூரிக்கு ஏற்கனவே ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது இரட்டை பாப்பா விருந்தினர்களாக வந்துள்ளதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சூரி வீட்டில் வளர்ந்து வரும் புறா இரண்டு குஞ்சுகளை பொறித்துள்ள உள்ள நிலையில் தான் தங்களுடைய வீட்டிற்கு இரட்டை பாப்பா வந்துள்ளதாக சூரி தெரிவித்துள்ளார்.
அந்தப் புறாக்களுக்கு அவருடைய குழந்தைகள் உணவு கொடுக்கும் காட்சிகளும் அது தவிர கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காட்சிகளும் அதில் உள்ளன.
இந்த உலகம் முழுவதும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சொந்தம் என்றும் ஆனால் நாம் காடுகளை அழித்து விட்டு தற்போது வானுயர கட்டிடங்கள் கட்டி கொண்டிருப்பதால்தான் ஆக்சிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சூரி மகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல் சூரி இந்த வீடியோவின் இறுதியில் இந்த உலகம் அவர்களுக்கானது என்றும் அவர்களை விரட்டிவிட்டு நாம் வானுயர கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர்களுக்கும் இந்த உலகம் சொந்தம் என்றும் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த விழிப்புணர்வை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.