Cannes Film Festival: காஞ்சிபுர சேலையில் செம்ம ஸ்டைலா போஸ் கொடுத்த நடிகை குஷ்பு
கேன்ஸ் திரைப்பட விழாவில் சேலையில் அழகாக வலம்வந்த நடிகை குஷ்புவின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா
பிரான்ஸில் கடந்த 16ம் தேதி தொடங்கிய 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பல மொழிகள் கொண்ட மொத்தம் 21 திரைப்படங்கள் போட்டிபோட உள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர்.
இவ்விழாவில் வருகை தரும் நடிகர், நடிகைகளுக்கு சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்படும்.
இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் 20வது முறையாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.
இவர் வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான உடையில் ஸ்டைலாக தோன்றினார். ஐஸ்வர்யா கருப்பு நிற கவுனுடன், பெரிய சில்வர் பேட்டை ஏந்தி வந்தார். அது அவருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது.
And Cannes fever continues! #IndiaAtCannes#Cannes2023 #traditional#sareelover#kanjeevaramPattu pic.twitter.com/ERjiQWaQKe
— KhushbuSundar (@khushsundar) May 20, 2023
சேலையில் அசத்திய நடிகை குஷ்பு
அந்த வகையில் நடிகையும், தேசிய மகளிர் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளார்.
நடிகை குஷ்பு கொண்டையில் பூ வைத்து, கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் புடவையை உடுத்தி செம்பு சிலைப்போல் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இவரை அங்கு சூழ்ந்திருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா... என்ன அழகு... என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
She wears her simplicity like a crown, for it is the most precious adornment a women can possess........❤️@khushsundar #KhushbuSundar pic.twitter.com/fJlXBI1GEn
— Tanisha ? (@tannu187) May 19, 2023