உடல் எடையைக் குறைத்து பிரபல நடிகருடன் நெருக்கமாக குஷ்பு! தடுமாற வைத்த நடிகர் இவர்தானாம்
நடிகை குஷ்பு பிரபல ஹாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர், தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தனது உடல் எடையை குறைத்து அவ்வப்பேது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வாரிசு படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் நடித்துள்ளார்.
இவர் உடல்எடையை குறைத்து வெளியிடும் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும், மனம் தளராத குஷ்பு சரியான பதிலடியும் கொடுத்து வருகின்றார்.
பிரபல நடிகருடன் குஷ்பு
இந்நிலையில் ஹாலிவுட் நாயகன் அஜய் தேவ்கன்னுடன் தான் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
என் ஹீரோவை சந்திப்பது ஒரு கனவு நினைவானது போல் உள்ளது. அவர் தனது எளிமை, பணிவு மற்றும் பூமிக்குரிய அணுகுமுறையால் என்னை தடுமாற வைத்தார். இதில் போலி எதுவும் இல்லை.
இவருக்கு உண்மையில் நான் ஒரு ரசிகப் பெண்மணி. உங்கள் நேரத்தையும் அரவணைப்பும் என் மீது செலுத்தியத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜய் தேவ்கன் நடித்த திரிஷ்யம் 2 படத்தின் பிந்தைய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.