கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம்!
ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்கவேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கும். ஆனால், சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அந்த ஆசையை அப்படியே நிராசையாகிவிடும்.
அதற்காக எங்கெல்லாம் எந்த க்ரீம் கிடைக்கும் முகத்துக்கு செலுத்தலாம் என்று பார்ப்போம்.
ஆனால், இவற்றையெல்லாம் விட இயற்கைப் பொருட்களான சந்தனம், குங்கமப்பூ, ரத்தச் சந்தன கலவை சேர்த்து செய்யப்படும் குங்குமாதி தைலம் நமது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் உதவும்.
இது மங்கு எனப்படுகின்ற கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. குங்குமாதி தைலத்தை பயன்படுத்தினால், பருக்கள் மறைந்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு மிகச் சிறந்த எதிரியாகும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் கண்களுக்கு கீழ் வரும் கருவளையங்கள் மறையும்.
எண்ணெய்த் தன்மையான சருமம் கொண்டவர்கள், குளிப்பதற்கு முன்னர் தடவிக்கொண்டு சிறிது நேரத்தில் குளிக்க வேண்டும்.
இந்த குங்குமாதி தைலத்தை உபயோகிக்கும்போது சோப்பை தவிர்த்து, பயத்தம் பருப்பு, எலுமிச்சை தோல் என்பவற்றைப் பயன்படுத்தலாம்.
குங்குமாதி தைலத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இரவு நேரங்களில் உதட்டில் தடவி வந்தால் படிப்படியாக சிவந்த நிறத்துக்கு உதடு மாறும்.
இந்த குங்குமாதி தைலத்தை தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு பயன்படுத்தினால் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கும்.