கும்பமேளா வைரல் பெண்ணுக்கு கேரளாவில் திருமணம்! மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா?
கும்பமேளா மூலமாக சமூக லைத்தளங்களில் வைரலான பெண் தான் மோனலிசா. இவருக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ள நிலையில், குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றது.
இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் முடித்துள்ளனர்.

கும்பமேளா வைரல் பெண்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் தான் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த இளம் பெண் மோனாலிசா.
இவரது தோற்றம் காண்போரை வெகுவாக கவர்ந்த நிலையில்,பொதுமக்களின் தொந்தரவு மற்றும் செல்ஃபி வெறியர்களால் கும்பமேளாவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. அதன் பின்னர் மோனாலிசா சில திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இவர், மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரின் தோற்றத்தையே மாற்றினர். எனினும் அவர் நடிக்கவிருந்த படத்தின் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மோனாலிசாவின் பாலிவுட் சினிமா வாய்ப்பு தடைப்பட்டது.

இதற்கிடையே நடிகர் உட்கர்சிங் உடன் இணைந்து பாடல் ஒன்றில் நடித்து அந்தப் பாடலும் பார்வையாளர்களை கவர்ந்தது. இதன் மூலமாக அவருக்கு பல்வேறு விளம்பர காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் மோனலிசா தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டார்.
தற்போது மலையாள இயக்குனர் வினோ வர்கீஸின் ‘நாகம்மா’ என்ற படத்தில் நடிகர் கைலாசுக்கு ஜோடியாக மோனாலிசா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது.

மோனாலிசா திருமணம்
இந்த நிலையில் அவருக்கு மும்பையைச் சேர்ந்த பர்மா கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கும் கேரளாவில் திருமணம் நடந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோனாலிசாவின் பெற்றோர் இவர்களது காதலுக்குகடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போரட்டங்களுக்கு மத்தியில், எளிமையான முறையில் இருவரும் கேரளாவில் பதிவு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |