குழந்தை பேறு வேண்டும் தம்பதிகளுக்கு அருளும் தெய்வம்!
நம் வாழ்க்கையில் இருக்கும் பல தடைகளை நீக்கி சூபீட்சமாக வாழ கோயில் கோயிலாக அலைவோம். கோயிலில் சென்று இறைவனிடம் மனமுறுகி வேண்டி வாழ்க்கையை வளமாக்க கோரி பல நேர்த்திகளை செய்து வழிபடுவோம். அவ்வாறு எண்ணியதை எண்ணியபடி நிவர்த்தி செய்து, குறைகளை நிறைகளாக மாற்ற கர்நாடக மாநிலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் முருகன்.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலை குக்கே சுப்ரமண்யா எனும் கிராமத்தில் குடி கொண்டிருக்கிறார் குக்கே சுப்ரமணியர்.
இந்தக் கோயில் கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற புராண வரலாறு கொண்ட கோயிலாக இருக்கிறது. இந்தக்கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் திருமண தடை, குழந்தை பேறு, கஷ்டங்கள் நீங்கி திரும்பி வரும் போது மகிழ்ச்சியுடன் திரும்பி வரவைக்கும் சக்தி உள்ள கோயிலாகும்.
மேலும், இந்த ஆலயத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள், தோஷங்களை எவ்வாறு நிவரத்தி செய்யும் என்பதை இந்தக் காணொளியில் முழுமையாக தெரிந்துக் கொண்டு பலன் பெறுவோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |