திருமணத்திற்கு பெண்கள் ஏன் சிவப்பு நிறத்தில் ஆடை அணிகிறார்கள் தெரியுமா?
பொதுவாகவே திருமணம் என்றால் எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும். ஆடைகளில் இருந்து சமையல் வரை எல்லாமே எல்லோரையும் திருப்திபடுத்தும் அளவில் இருக்க வேண்டும்.
அதேபோல மணப்பெண்ணாக இருக்கும் பெண் இன்னும் அழகாக தோன்ற வேண்டும். அதிலும் அவர் அணியும் ஆடை அனைவரையும் கவர்த்திழுக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் தங்களது திருமண ஆடையை தேர்ந்தெடுக்கும் போது அதிகம் சிவப்பு நிற ஆடைகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள்.
மற்றொரு தரப்பினர் வெள்ளை ஆடைகளை தேர்ந்தெடுப்பார்கள் ஏனெனில் வெள்ளை தூய்மையின் அடையாளம் என்பதால், அது போல சிவப்பு நிறத்தில் மணமகள் ஆடை அணிவதற்கு பின்னாலும் பல காரணம் இருக்கிறதாம். அது என்ன தெரியுமா?
திருமணத்தில் சிவப்பு நிற ஆடை
சிவப்பு நிறம் என்பது இந்து கடவுளான துர்கை அம்மனை குறிக்கிறது. துர்கை அம்மன் உலகிற்கு அமைதியையும், தைரியத்தையும் வலிமையையும் கொடுப்பவர் அதனால் திருமணமான பெண்கள் புகுந்த வீட்டிற்கு வரும் போது இவற்றை கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது.
ஜோதிடத்தின் படி சிவப்பு நிறமானது செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இந்த சிவப்பு நிறம் அதிஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் புரிதலையும் கொடுக்கிறது.
சிவப்பு நிறம் என்பது பணக்கார மற்றும் அர்த்தமுள்ள நிறமாகும். சிவப்பின் பொருள் புதிய ஆரம்பம், செழிப்பு, ஆர்வம் என்பவற்றை குறிக்கிறது. அது போல திருமணம் முடித்து வரும் பெண் புதிய வாழ்க்கை, அதிஷ்டம், நல்வாழ்வு என்பறவற்றைக் குறிக்கிறது.
இந்துக் பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிவது அணைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக மட்டுமல்லாமல், காதல், உற்சாகம் என்பவற்றை உருவாக்கவும் ஏற்ற நிறம்.
மேலும், திருமணத்தில் வெள்ளை நிறம் மற்றும் நீல நிறங்கள் எதிர்மறையான அதிர்வுகளை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |