தம்பதியரின் பந்தத்தை வலுப்படுத்தும் குபேர மூலை
நிலம் என்பது நாம் வாழும் பூமியாக காணப்படுகிறது. அதேசமயம் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.
வாஸ்து அடிப்படையில் நாம் பார்த்தோமானால், தென்மேற்கு மூலையானது நிலத்துக்கு ஒப்பிடப்பட்டு கூறப்படுகிறது.
இந்த தென்மேற்கு மூலையை நைருதி மூலை அல்லது குபேர மூலை என்று கூறுவர். திசைகளில் தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல்மிக்க களமாக காணப்படுகிறது.
வீட்டில் உள்ள மேடு, பள்ளங்களே ஒருவரது வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை முடிவு செய்கின்றன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு கட்டடத்தினோ அல்லது வீட்டினதோ தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது திறப்போ வைக்கக்கூடாது.
நாம் வாழும் பூமியானது, நேராக சுழலாமால் தனது அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இவ்வாறு கிழக்காக சாய்ந்துள்ளதால்தான் சூரியளை நீள்வட்டப் பாதையில் சுற்றிவர முடிகின்றது.
அதுமாத்திரமில்லாமல் பூமியானது, சூரியனை சுற்றும்போது பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தாழ்ந்தும் தென்மேற்க பகுதி உயர்ந்தும் உள்ளது.
இதன் காரணமாகத்தான் நாம் வீட்டை கட்டும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும் வடகிழக்கு மூலையை தாழ்வாகவும் வைப்பது அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.