வில்லி நடிகை திருமணம் செய்ய துடித்த இளைஞர்: மகன் புகைப்படத்துடன் நடிகை கொடுத்த பதிலடி
சின்னத்திரையில் முன்னணி நடிகையாகவும், வில்லியாகவும் வலம் வரும் நடிகை கிருத்திகா அண்ணாமலையை திருமணம் செய்ய இளைஞர் ஒருவர் கேட்டுள்ளார்.
நடிகை கிருத்திகா பிரபல ரிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். பின்பு திருமணம் செய்து கொண்ட இவர் 3 வருடங்கள் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்தார்.
அதன் பின்பு நடிப்பில் களமிறங்கிய இவர் வில்லி, கதாநாயகி என பட்டையக் கிளப்பி வருகின்றார். தற்போது சுந்தரி சீரியலில் பொலிஸ் கேரக்டரிலும், பாண்டவர் இல்லம் சீரியலில் மூத்த மருமகள் ரேவதியாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார்.
நடிகை கிருத்திகா அருண் சாய் என்ற நபரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
திருமணமானதால் இடையில் படு குண்டாக இருந்த அவர் பின் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து படுஸ்லிம்மாக மாறி இருக்கிறார். தான் ஸ்லிம்மாக மாறிய பின் அவர் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை கிருத்திகா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டோரி போஸ்ட் செய்திருந்தார்.
அப்போது ஒருவர் கிருத்திகாவுக்கு ப்ரோபோஸ் செய்து ‘என்னை திருமணம் செய்துகொள்வீர்களா ப்ளீஸ்’ என்று கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இது என்னுடைய மகன், ப்ரோ’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
