Krishna Jayanti: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்- வாங்கி பாருங்க
இந்து மதத்தின்படி கிருஷ்ண ஜெயந்தி மிகவும் முக்கியத்துவமான நாளாக பார்க்கப்படுகின்றது.
இந்த நாளில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் பிறந்ததாக சொல்லப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியானது ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது.
சிலர் கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டில் கிருஷ்ண பாதங்களை வரைந்து, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படி வழிபடும் போது கிருஷ்ணரின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து வகையான கஷ்டங்களும் நீங்கி, வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுகின்றதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று சில பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் உள்ளது. அப்படியான பொருட்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கக் கூடிய பொருட்கள்
1. உங்கள் வீட்டில் குட்டி கிருஷ்ணரின் சிலை இல்லாவிட்டால் இந்த நாளில் குட்டி கிருஷ்ணர் சிலை வாங்கலாம். இது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும். லட்சுமி அருளால் கண்டிப்பாக நடக்கும் எனவும் கூறப்படுகின்றது.
2. கிருஷ்ணருக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் கையில் எப்போதும் புல்லாங்குழலை பார்க்கலாம். இப்படி கிருஷ்ணருக்கு பிரியமான புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கினால் வீட்டிற்கு நல்லது நடக்கும். புதிய வணிகம் தொடங்கினால் அங்கும் கொண்டு செல்லலாம். வாஸ்துப்படி தோஷங்களும் நீங்கும் எனக் கூறப்படுகின்றது.
3. புல்லாங்குழலுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணருக்கு பிடித்தது அவர் தலையில் இருக்கும் மயில் இறகு தான். இது ராதாவின் அன்பின் அடையாளமாக வைத்திருக்கிறார். இதனை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கினால் செல்வம் பெருகும். வீட்டில் அன்பு அதிகரிக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
4. கிருஷ்ண ஜெயந்தி நாளில் பசு மற்றும் கன்று சிலையை வீட்டிற்கு வாங்கி வைக்கலாம். இது 14 செல்வங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பசுவின் சிலை வீட்டிலுள்ள செல்வத்தின் அடையளமாக பார்க்கப்படுகின்றது. வீட்டில் மகிழ்ச்சி பெருகும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
5. கிருஷ்ணருக்கு பிடித்தமானவைகளில் வெண்ணெய் முக்கிய இடம் பிடிக்கிறது. வெண்ணெயை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கி கிருஷ்ணருக்கு படைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த 4 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை- மற்றவர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று உள்ளதாம்- உங்க ராசி என்ன?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |