சுனாமியே வந்தாலும் அசால்டா சமாளிக்கும் தைரியம் கொண்ட நபர்கள்- சாணக்கியர் சொல்வது என்ன?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் மேதாவிகளாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த திகதி என்ன?
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எளிதில் சமாளிக்கும் குணம் இருந்தால் அவர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்.
இந்த 4 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை- மற்றவர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று உள்ளதாம்- உங்க ராசி என்ன?
சாணக்கிய நீதியின்படி, எந்தெந்த குணங்களைக் கொண்டவர்கள் நெருக்கடியான காலங்களில் தளர மாட்டார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. ஒரு மனிதருக்கு பொறுமை மற்றும் நிதானம் அவசியம் தேவை. இது இல்லாத ஒரு மனிதர் வாழ்க்கையில் முன்னேறுவது மிகக் கடினம். பிரச்சினைகள் வரும் போது நிதானமாக அதனை கையாண்டால் உங்களுக்கு வரும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
2. எப்போதும் கையில் போதுமான பணம் உள்ளவர்கள் கெட்ட காலம் வந்தாலும் அதனை எளிதில் சமாளித்து விடுவார்கள் என சாணக்கியர் கூறுகிறார். ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்யாமல் சேமிப்பு அவசியம். செல்வம் அதிகமாக இருப்பவர்கள் எமது சமூகத்திலுள்ள ஏழை மக்களுக்கு தானமாக கொடுக்கலாம். இது உங்களின் பரம்பரையினருக்கு புண்ணியமாக போகும்.
3. சாணக்கிய நீதி படி , நல்ல முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பிக் கொள்கிறார்கள். எப்போதும் நம் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் இருக்கும். கடினமாக காலங்களில் சரியான முடிவுகளை எடுப்பது தான் புத்திசாலிகள் செய்யும் ஒரே வேலை.
4. வயதானதாலும் கற்றுக் கொண்டே இருக்கலாம். கல்வியும், அறிவுமே உண்மையான அழியாத செல்வம் என்று சாணக்கியர் கூறுகிறார். பணம் இல்லாவிட்டாலும் கல்வி செல்வம் உங்களிடம் இருக்கும் வரைக்கும் கெட்ட காலங்கள் உங்களை நெருங்காது. பிரச்சினைகள் வரும் போது அதற்கான தீர்வை உங்களின் அறிவாற்றல் கொடுத்து விடும். எனவே படிப்பதற்கு மட்டும் வயது பார்க்காதீர்கள். இதனால் சமூகத்தில் நல்ல மரியாதையும் கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.
5. எந்த நடந்தாலும் சுற்றியுள்ளவர்களை பொறுத்து முடிவெடுப்பது சிறந்தது. உங்களுக்கு ஒரு எதிரி இருந்தால் அவர்களை இலகுவில் தோற்கடிக்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். உங்களுக்கான நேரம் வரும் போது அதற்கான பதிலடிக் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். நண்பர் என நினைத்து துரோகிக்கு சோறு போட்டு வளர்க்காதீர்கள். இது தான் பெரிய முட்டாள்த்தனம் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |