கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் வேண்டுமா? இந்த 2 பொருட்களை சேர்த்து பாருங்க
பொங்கள் பண்டிகை என்றாலே பொங்கல் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. பொங்கல் விழா, மக்களால் தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஒரு நன்றி செலுத்தும் விழாவாக பார்க்கப்படுகின்றது.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன் இனிப்பான பொங்கல் செய்து கொண்டாடி வருகின்றனர்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 3 தே.கரண்டி
வெல்லம் - ஒன்றரை கப்
நெய் - ¼ கப்(உங்கள் விருப்பத்திற்கே ஏற்ப)
ஏலக்காய் - 2
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
பால் - 4 தே.கரண்டி
சமையல் கற்பூரம் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 1
ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை (விருப்பத்திற்கு ஏற்றது)
முந்திரி- 10
திராட்சை - 15
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ¼ டீஸ்பூன் நெய் சேர்த்து, பாசிப்பருப்பை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரிசியை நன்றாக கழுவி ஒரு பானையில் அல்லது குக்கரில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். குக்கர் என்றால் 3 விசில் வரை விட வேண்டும்.
அதற்கிடையில் அரிசி வேகும் நேரத்தில், வெல்லத்தை உடைத்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் உற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும் வடிகட்டி, குக்கரில் மசித்த அரிசியுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கடாயில், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, திராட்சையையும் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து விட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்னர் சக்கரை கலந்த அரிசியில் வறுத்த ஏலக்காய், கிராம்பு, உண்ணக்கூடிய கற்பூரம் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்த்து விரைவாக கிளறிவிட வேண்டும்.
ஏலக்காயை வறுக்காமல் பச்சையாகவும் பொங்கலில் சேர்க்கலாம்.அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலந்து, பால் சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.
இறுதியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், தெய்வீகமான சுயைில் கோவில் பிரசாதம் போன்ற சர்க்கரைப் பொங்கல் தயார். கற்பூரம் மற்றும் ஜாதிக்காய் தான் இந்த தெய்வீக தன்மை ஏற்படுவதற்கு காரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |