கறிசுவையை மிஞ்சும் கோவைக்காய் தொக்கு: இப்படி ஒருமுறை செய்து பாருங்க
பொதுவாக அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு காய்கறியாக போவைக்காய் பார்க்கப்படுகின்றது. கோவக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் செரிவாக காணப்படுகின்றது.
உடல் பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கோவக்காய் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.உடலில் கொழுப்பு செல்கள் உருவாக்கத்தை தடுப்பதில் கோவைக்காய் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதுமட்டுமன்றி மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு...
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 15 பல்
மிளகு - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கெட்டி தயிர் - 100 மிலி வதக்குவதற்கு
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கோவைக்காய் - 1/2 கிலோ கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தண்ணீர் - தேவையான அளவு
மட்டன் மசாலா/கரம் மசாலா - 1 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
வெல்லம் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கோவைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து 2 நிமிங்கள் வரையில் வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
கோவைக்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மட்டன் மசாலா/கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு தூவி கிளறிவிட்டு, மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வரையில் மூடி வேகவிட வேண்டும்.
இறுதியில் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கோவைக்காய் கறி தொக்கு தயார். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |