கொத்தவரங்காயைப் பிடிக்காதவர்களுக்கு இப்படி துவையல் செய்து கொடுங்க- சுவை அள்ளும்!
வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொத்தவரங்காயை பார்த்தாலே முகம் சுளிப்பார்கள்.
அப்படியானவர்களுக்கு கொத்தவரங்காயை பயன்படுத்தி சுவையல் செய்து கொடுக்கலாம்.
இந்த கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது, அதே சமயம், எடையையும் ஆரோக்கியமாக பராமரிக்கிறது.
இது போன்ற எண்ணற்ற நன்மைகள் கொத்தவரங்காயில் உள்ளன, இதனால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
அந்த வகையில், கொத்தவரங்காயில் எப்படி துவையல் செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
• பெரிய வெங்காயம் – 1 (மீடியம் அளவில் நறுக்கியது)
• உளுந்து – ஒரு ஸ்பூன்
• புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
• வர மிளகாய் – 2
• பச்சை மிளகாய் – 1
• தேங்காய்த் துருவல் – அரை கப்
• கொத்தவரங்காய் – 15
• உப்பு – தேவையான அளவு
• மல்லித்தழை – சிறிதளவு
துவையல் செய்வது எப்படி?
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும், எண்ணெய் சேர்க்கக்கூடாது.
அதன் பின்னர், அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன் புளி, வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து வதக்கவும். கடைசியாக கொத்தவரங்காயை சேர்த்து வதக்கவும். கலவையை நன்றாக ஆற விட்டு ஆறியதும், மிக்ஸ் ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அதில், வதங்கிய வெங்காயம், உப்பு மற்றும் வாசனைக்கான சிறிது ஃபிரஷ்ஷான மல்லித்தழை கட்டாயம் இருக்க வேண்டும். துவையல் பதத்திற்கு வேண்டும் என்றால் தண்ணீர் குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த படிமுறையை சரியாக செய்தால் கொத்தவரங்காய் துவையல் தயார்! இதனை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து கூட சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |