தொப்பையை குறைக்க முடியாம கஷ்டப்படுறீங்களா? கொத்தமல்லி வெங்காய தொக்கு இப்படி செய்து சாப்பிடுங்க
பொதுவாக அனைவருக்குமே உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக தொப்பை இல்லாமல் இருப்பதற்கு பெண்கள் முயற்சிக்காத வைத்தியமே கிடையாது.
உடல் எடையை குறைப்பதற்காக நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறதா? கவலையே வேண்டாம்.
வீட்டின் சமையலறையில் உள்ள கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை வைத்து தொப்பை பிரச்சினைக்கு முடிவுகட்டும் அசத்தலான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி வெங்காய தொக்கை எளிமையாக வெறும் 15 நிமிடங்களில் எவ்வாறு தயார் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 15
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கல் உப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - 1 கட்டு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு வெந்தய பொடி - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளி, கல் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு 3 தொடக்கம் 4 நிமிடங்கள் வரையில் நன்றாக வதகிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
பின்பு அதனை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அரைத்ததை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது, அரைத்து வைத்துள்ள கடுகு வெந்தய பொடியை சேர்த்து நன்றாக கிளறி, 2 தொடக்கம் 3 நிமிடங்கள் வரையில் வேக வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி வெங்காய தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |