கல்லீரல் பிரச்சினைகளை சரிச் செய்யும் துவையல்.. இந்த இலை போட்டு செய்ங்க- அற்புத பலன்கள்
பொதுவாக நமது உடம்பில் வரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு மருந்துகளில் இல்லை.
மாறாக ஆரோக்கியமான உணவு பழக்கங்களில் உள்ளது. எப்போதும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை வைத்திருப்போருக்கு நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.
கலாச்சார மாற்றங்கள், நவீனத்துவம் வளர்ச்சி, பரம்பரை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாமல் போகிறது.
அந்த வகையில், நம்மிள் பலரை தாக்கும் கல்லீரல் பிரச்சினைகளை வர விடாமல் செய்வதற்கு நிறைய உணவுகள் உள்ளன. ஆனால் நம்முடைய அறியாமையால் அவை நம்முடைய கண்களுக்கு மாத்திரம் தெரியவதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தல், ஊட்டசத்துக்கள் வழங்குதவ், செரிமான கோளாறுகளில் இருந்து விடுப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளிட்ட பல வித்தைகளை தன்வசம் வைத்திருக்கும் மூலிகை தான் கொத்தமல்லி.
இந்த தழைகளை நாம் அலங்காரப் பொருளாக தான் இவ்வளவு நாட்களாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த தழையை வைத்து ஏகப்பட்ட உணவுகள் செய்யலாம், அதிலும் குறிப்பாக கொத்தமல்லி தழையை மையமாக கொண்டு செய்யப்படும் துவையல் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக மாறுகின்றது.
இதன்படி, நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கொத்தமல்லி தழைகளை வைத்து எப்படி சுவையான துவையல் அரைப்பது என்பதை பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி - ஒரு கட்டு
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - 2 பல்
- பச்சை மிளகாய் - 2
- புளி - சிறிய துண்டு
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல்- 1 கப்
துவையல் செய்வது எப்படி?
கொத்தமல்லி தழைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அம்மியை நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய பொருட்களை போட்டு நன்றாக நசுக்கி அரைத்துக் கொள்ளவும்.
அதற்கு முன்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், உளுத்தம்பருப்பு, கடுகு போட்டு தாளித்து, அதில் கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழைகளையும் கொட்டவும்.
லேசாக தழைகள் வாடியவுடன் அந்த கலவையை அம்மியில்அரைத்து வைத்திருக்கும் கலவையுடன் போட்டு அரைக்கவும். அரைத்து கொண்டிருக்கும் பொழுது தேவையான அளவு புளி, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி தழைகளை மைப் போன்று அரைத்த பின்னர், தேங்காய் துருவலை சேர்க்கவும். தேங்காய் பூ மைப் போன்று வரும் வரை அரைத்து எடுத்தால் சுவையான மற்றும் காரசாரமான கொத்தமல்லி துவையல் தயார்.
இதனை சூடான சாதம், ரசம், மிளகாய் துண்டுகள் வைத்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். அம்மி இல்லாதவர்கள் மிக்ஸியில் பயன்படுத்தலாம். ஆனால் சுவை மற்றும் ஆரோக்கிய பலன்களை முழுமையாக பெற முடியாது. அம்மியில் அரைக்கும் பொழுது சுவையுடன் சேர்த்து ஆரோக்கிய பலன்களும் அதிகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |