வீட்டில் அரிசி மாவு இருக்கா? அப்போ இந்த கொரியன் ரெசிபி தப்போக்கி செய்ங்க
தற்போது இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கொரியர்கள் என்ன செய்தாலும் பிடிக்கும். கொரியர்கள் மீது உள்ள ஆசையால் அவர்களின் உணவை தேடி தேடி உண்பார்கள்.
அப்படி கொரியர்களின் பிரபலமான உணவுகளில் ஒன்று தான் இந்த தப்போக்கி.
இந்த "தப்போக்கி" (Tteokbokki). இது அரிசி மாவில் இருந்து செய்யப்படும் ஒரு காரமான கொரிய உணவு. இதை செய்ய வீட்டில் சில பொருட்கள் இருந்தா காலை உணவாகவோ அவசர உணவாகவோ செய்யலாம்.
தப்போக்கி செய்ய தேவையானவை
- குளுட்டன் அரிசி மாவு
- கோசுசங் சாஸ்
- சர்க்கரை
- உப்பு
- தண்ணீர்
- சோயா சாஸ்
- பூண்டு
- ஸ்ப்ரிங் ஆனியன்
தப்போக்கி செய்முறை
அரை கப் குளுட்டன் அரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். அதில் கால் கப் சுடுநீர் ஊற்றி நன்றாக கலக்கவும். சப்பாத்தி மாவு போல மென்மையாக பிசையவும்.
பிசைந்த மாவை சிறிய விரல் வடிவ உருளைகளாக உருட்டவும். இதனை கொதிக்கும் நீரில் போட்டு, மேலே மிதக்கும் வரை வேக விட வேண்டும். இவை வெந்ததும் குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும் (இது மென்மையுடன் இருக்கும்).
சாஸ் தயாரித்தல் ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கோசுசங் பேஸ்ட், 2 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் சோயா சாஸ், சிறிதளவு பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்த கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
மாவை சாஸில் சேர்த்தல்: குளிர்ந்த நீரில் வைத்திருந்த மாவை வடிகட்டி, கொதிக்கும் சாஸில் போட்டு, சாஸ் உள்வாங்கும் வரை சிம்மராக வைத்து கிளறவும். சாஸ் சற்று வற்றும் போது அடுப்பை ஆஃப் செய்யவும். இறுதியாக மேலே ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
