கொரிய பெண்களின் இளமைக்கு பின்னால் இருந்து வேலை பார்க்கும் பேஸ் பேக்!
பொதுவாக பெண்கள் 30 வயதை தாண்டும் பொழுது அவர்களின் இளமை படிப்படியாக மாற துவங்கும்.
ஆனால் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு தற்போது என்ன வயது என்பதை கூட கண்டுபிடிக்க முடியதாம்.
அம்மா- மகள் என அனைவரும் இளமையாக தான் இருப்பார்களாம். அப்படி என்ன டயட் பிளான் வைத்திருக்கிறார்கள் என பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள்.
Image - bebeautiful
அந்த வகையில் கொரியன் பெண்கள் தங்களின் முக அழகை பராமரிப்பதற்கு என்ன பேஸ் மாஸ்க்கை பயன்படுத்துகிறார் என தொடர்ந்து பார்க்கலாம்.
முக அழகை பாதுகாக்கும் பேஸ் மாஸ்க்
1. சிங்கிள் யூஸ் ஷீட் மாஸ்க்கள் மெல்லிய காட்டன் போன்ற துணியால் செய்யப்படுகின்றது. இது சருமத்திற்கு தேவையான நீரேற்றம், பளபளப்பு இவை இரண்டையும் தருகின்றது.
2. கொரியன் பெண்கள் பயன்படுத்தும் பேஸ்க் மாஸ்க்கில் ஹையாலூரோனிக் ஆசிட், நியாசினமைட், வைட்டமின் C மற்றும் பல்வேறு தாவர பொருட்கள் மூலப்பொருட்களாக பயன்படுகின்றது. இதனால் அப்பெண்களின் முகத்தில் நீரேற்றும் தன்மை, சரும பளபளப்பு மற்றும் ஆன்டி ஏஜிங் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
Image - healthshots
3. கொரியன் பெண்கள் அவர்களின் சருமத்தின் மீது அதிகமான கவனம் கொள்கிறார். அத்துடன் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்கிறார்கள்.
4. கொரியன் பெண்கள் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்த முன்னர் சீரம் போன்று ஒரு திரவத்தை முகத்தில் அப்ளை செய்கிறார்கள். இது அவர்களின் சருமத்தை பராமரிக்கின்றது.