கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இது தான் காரணமாம்! வாரத்துல 2 நாள் மட்டும் இத பண்ணுங்க
கொரிய பெண்கள் எப்போதுமே கச்சிதமான உடலுடன் அழகாக இருப்பார்கள்.
இதனால் பல கொரிய அழகு குறிப்புகள் இன்று பிரபலமாக மாறியுள்ளன.
அவற்றில் ஒன்றை மட்டும் தற்போது முயற்சி செய்யுங்கள். அதன் முடிவுகளின் பலனை அறிந்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
உங்கள் சருமம் இளமையாகவும், உறுதியாகவும், மென்மையாகவும் இருக்கும். கொரியப் பெண்களின் முகம் போல நீங்களும் ஜொலிக்கனுமா?
இந்த குறிப்பு உங்களுக்கு தான்.

தேவையான பொருள்கள்
- அரிசி ஊறவைத்த நீர்
- காட்டன் சிறிதளவு
பயன்படுத்தும் முறை
2 ஸ்பூன் அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி விட்டு, அதன் பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊற விடுங்கள்.
முதல் வழிமுறையைத் தொடங்கும்போதே அரிசியை ஊற வைத்து விடுவது நல்லது.

அரிசி நன்கு ஊறிய நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு, அதை காட்டனில் தொட்டு தொட்டு முகம் முழுக்க அப்ளை செய்யுங்கள்.
இதையும் இரண்டு கோட்டிங் வரை அப்ளை செய்யலாம்.
5 நிமிடங்கள் வரை லேசாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியை வட்ட வடிவில் மசாஜ் செய்து விடுங்கள்.
பிறகு அப்படியே 15 நிமிடங்கள் உலர விட்டு பின் முகத்தை ஈரத் துணி கொண்டு துடைத்து விடுங்கள்.
அரிசி கழுவிய தண்ணீர் முகத்துக்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.
உங்களுடைய முகத்தைக் கண்ணாடி போல மாற்றுவதில் மிக முக்கியமான பங்கு இந்த அரிசி தண்ணீருக்கு உண்டு.