உடல் எடையை சீக்கிரம் குறைக்கணுமா? கொள்ளு சுரைக்காய் தோசையை இப்படி செய்து சாப்பிங்க
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அதிகரித்த வேலைப்பளு, துரித உணவுகளின் துகர்வு அதிகரித்தமை, ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது.
அதிகரித்த உடல் எடையால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும் கூட விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு சுரைக்காய் தோசையை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் - 100 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
கொள்ளு - 200 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 1 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/4 தே.கரண்டி
சோம்பு - 1/4 தே.கரண்டி
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு, பச்சரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 7 மணிநேரம் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கழுவிய அரிசி பருப்பை பாதி சேர்த்து, அத்துடன் வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, , துருவிய தேங்காய் ,கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மீதமுள்ள அரிசி பருப்பை சேர்த்து, அத்துடன் சுரைக்காயை துண்டுகளாக்கி சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவையும் ஏற்கனவே மென்மையாக அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு ஏற்றவாறு நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், அவ்வளவு தான் உடல் எடையை ஆரோக்கியமாக முறையில் கட்டுப்படுத்தும் சுரைக்காய் கொள்ளு தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |