குளவி கொட்டி விட்டால் மறந்தும்கூட இந்த தவறை செய்யாதீங்க! ஆபத்தானது
குளவி என்பது ஹிம்னோட்பெரா வகுப்பை சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும். இவை தேனீயுமல்லாத எறும்புமல்லாத அபோக்ரிட்டா எனும் துணை வரிசையை சேர்ந்தவை.
இவை சில வேளைகளில் கூட்டமாகவும் சிலவேளைகளில் தனியாகவும் வாழ்பவை. குளவிகள் கவர்ச்சியான வண்ணங்களில் இருக்கின்றன. இளம் மஞ்சள், அடர் பழுப்பு, மெட்டலிக் புளூ, ஆழ்சிவப்பு, கறுப்பு மற்றும் வரி வடிங்களிலும் உள்ளன.
இவற்றிக்கு தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகள் பிரிக்கப்பட்டாலும் மற்ற பூச்சிகளைப் போல் இல்லாமல் மார்பையும், வயிற்றையும் இணைக்க ஒரு மெல்லிய இடுப்பு இருக்கிறது, உறுதியான புறத்தோல் உள்ளது.
உணவுகளை அரைக்க வலிய தாடைகளுடன் கூடிய வாய், பல கூட்டுக் கண்கள், இரண்டு ஜோடி இறக்கைகள், மூன்று ஜோடி கால்களும் உள்ளன.
12 முதல் 13வரை உணர்கொம்புகள் உள்ளன. இதன் வால் முனைப்பகுதிகளில் பெண்குளவிகளுக்கு விஷக்கொடுக்குகள் உண்டு.
இந்த விஷக்கொடுக்குகளை கொண்டு நம்மை கடித்துவிட்டால், தாங்க முடியாத வலி உண்டாகும், ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி, கொட்டிய இடத்தின் மத்தியில் வெள்ளை நிறதிட்டு, கொட்டிய இடம் வீங்குதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது, இந்த பதிவில் குளவி கொட்டியவுடன் என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
குளவி கொட்டியதும் முதல் வேலையாக அந்த கொடுக்கை உங்கள் உடலில் இருந்து நீக்கி விடுங்கள், இல்லையேல் அடுத்த சில நொடிகளில் அந்த விஷம் உங்கள் உடலில் பரவ நேரிடும்.
உங்களது நகத்தை கொண்டு கொடுக்கை நீக்க முயற்சிக்கவும், இல்லையெனில் சோப்பின் மூலம் நன்றாக கையை கழுவவும்.
எந்தவொரு காரணத்தை கொண்டு அந்த இடத்தில் அரிப்பு இருந்தால் சொறியக்கூடாது, இது பிரச்சனையை தீவிரப்படுத்திவிடும்.
உடல் எடையைக் குறைக்க கஷ்டமா? இந்த 5 உணகளில் ஒன்றை எடுத்துக்கோங்க
ஐஸ்கட்டி ஒத்தடம்
இதற்கு அடுத்தபடியாக ஐஸ்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம், இதனால் வலி மற்றும் வீக்கம் குறைவதுடன் அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுக்கும்.
ஒத்தடம் கொடுக்கும் போது ஐஸ்கட்டிகளை துணியில் வைத்து நன்றாக சுற்றிய பின்னர் ஒத்தடம் கொடுக்கலாம், நேரடியாக ஐஸ்கட்டியை தோலின் மீது மறந்தும் கூட வைத்துவிடாதீர்கள், இதனால் அந்த பகுதி உறைந்துவிட நேரிடலாம்.
ஐஸ்கட்டி ஒத்தடத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை செய்து வருவது பலனை தரும்.
பேக்கிங் சோடா
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும், இந்த பேஸ்டை குளவி கொட்டிய இடத்தில தடவி 5-10 நிமிடம் அப்படியே விடவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தைக் கழுவவும், அடுத்த சில மணிநேரத்தில் மறுமுறை இதனைச் செய்வதால் அசௌகரியம் சற்று குறையலாம்.
கர்ப்பகாலத்தில் பயணம் செய்தால் கருக்கலைப்பு ஏற்படுமா?
பூண்டு சாறு
நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள பூண்டை சாறு எடுத்து, அந்த சாற்றை கொண்டு 20 நிமிடங்கள் வைக்கவும், பூண்டிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருப்பதால் இது நல்ல பலனை கொடுக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
பதனிடப்படாத வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்து அதில் சிறிதளவு பஞ்சை நனைத்து எடுக்கவும்.
வீக்கத்தின் மீது அந்த பஞ்சை 5-10 நிமிடம் வைக்கவும், வலி அதிகரிக்கும்போது அவ்வப்போது இதனை பின்பற்றவும். குறிப்பு: ஆப்பிள் சிடர் வினிகர் இல்லை என்றால், வெள்ளை வினிகரும் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு கிட்னி பிரச்சனை இருக்கா? அப்போ இந்த உணவுகள சாப்பிடாதீங்க
சுத்தமான தேன்
சுத்தமான தேன் காயத்தை விரைவாக குணப்படுத்தவும், தொற்று பரவாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
எனவே குளவி கொட்டிய இடத்தில் தேனை தடவி நன்றாக துடைத்து அதை 30 நிமிடங்களுக்கு ஒரு துணியால் மூடி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
யாருக்கும் தேன் ஒவ்வாமை இருந்தால் இதை செய்ய வேண்டாம்.
இதுதவிர தேனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இந்த முறையை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
கற்றாழை ஜெல்
ஒரு கற்றாழை இலையை எடுத்து நன்றாகக் கழுவி, அதனை வெட்டி அதில் இருந்து ஜெல்லை எடுக்கவும்.
இந்த ஜெல்லை பாதிக்கபட்ட இடத்தில் தடவவும், ஒரு நாளில் பலமுறை இதனை செய்து வரவும்.
கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு உப்பிடுதா? இதனை போக்க என்ன செய்யலாம் தெரியுமா?
வெண்மை நிற டூத்பேஸ்ட்
பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு டூத்பேஸ்டை தடவி, சில மணி நேரம் அப்படியே விடவும்.
பிறகு ஒரு ஈர துணியால் அந்த பேஸ்டை எடுத்து விடவும், ஒருநாளில் அவ்வப்போது இந்த முறையை பின்பற்றலாம்.
பல வண்ண நிறம் கொண்ட டூத்பேஸ்ட், ஜெல் டூத் பேஸ்ட், பற்களின் வெண்மையை அதிகரிக்க பயன்படுத்தும் whitening டூத்பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
குளவி கொட்டியதும் எளிய சிகிச்சை முறைகளின் மூலம் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும், ஒருவேளை அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் மருத்துவரை பார்ப்பது நல்லது.
- மார்பு அல்லது தொண்டையில் கடுமையான வலி
- கட்டுப்படுத்த முடியாத இருமல்
- தொண்டையில் ஒருவித கூச்ச உணர்வு
- திடீர் மயக்கம், மூச்சுத்திணறல்
- வாந்தி, அதீத வியர்வை
- உடலில் அதிகளவான எரிச்சல், தோல் அலர்ஜி
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.