ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க வரும் வில்லன்.. இதுவும் வாரிசா?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னை யாராலும் அடக்க முடியாது என ஆணவத்துடன் இருக்கும் குணசேகரனை அடக்குவதற்காக புதிய வில்லன் கதாபாத்திரம் ஒன்று அறிமுகமாகவுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் சினிமா படங்களை விட விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியலில் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கடந்த 2022 முதல் 2024 வரை முதலாம் பாகம் விறுவிறுப்பாக சென்றது. அதன் பின்னர் இரண்டாவது சீசன் ஆரம்பமாகி அதுவும் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது தர்ஷன் - பார்கவி திருமணம் பல திருப்பங்களுடன் இனிதே நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் ஆதிகுணசேகரன் அறையில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா? என தேட வந்த சக்திக்கு ஒரு கடிதம் கிடைப்பது போன்று காட்டப்பட்டது.
அந்த கடிதம் சுமாராக 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டுள்ளது. அதனை படித்த சக்தி பதறிப் போன காட்சிகள் சீரியலில் காட்டப்பட்டது. அப்படி என்ன கடிதத்தில் இருந்தது என்று காட்டப்படவில்லை. நேற்றைய தினம் மகனின் திருமணம் முடிய வீடு திரும்பிய குணசேகரன் அலுமாரியில் கடிதத்தை தேடுகிறார்.
கடிதத்தில் என்ன இருந்தது?
குறித்த கடிதத்தில் பெண்ணொருவர் குணசேகரனுக்கு, “ இரவு 2.30, அக்டோபர் மாதம் 18ந் தேதி, வருடம் 1990. தற்போது இங்கு ராமேஸ்வரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அழித்துக் கொண்டிருக்கிறது. என் மனமும் அதே போன்று தான் உள்ளது. இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் பொழுது தான் உயிருடன் இருக்க மாட்டேன். எதுவும் மிகுதியாக இல்லை என சந்தோஷம் கொள்ளதே. மிகுதியாக இந்த கடிதம் இருக்கும்.
நீ விட்டுட்டு போனது வெறும் பேப்பர் இல்ல, ஒரு விதை. அந்த விதை நாளைக்கு கிளைகளுடன் வந்து ஒரு கழுத்தை நெரிக்கும். அது உன்னுடைய வம்சத்தையே அழிக்கும். உன்னை நிர்மூலம் ஆக்கும். இப்போ எல்லாம் அழிஞ்சிடுச்சுனு நினைச்சுட்டு இருக்க, ஒரு காலம் வரும், அப்போ நீ அய்யய்யோ விட்டுட்டோமே, ஏமாந்துட்டோமேனு நினைப்ப. அன்னைக்கு உனக்கு தெரியும், நீ பண்ணிய பாவம், உன்னை துரத்தி வரும்” என எழுதப்பட்டுள்ளது.
அடக்கி ஆள வருபவர் யார்?
இந்த நிலையில், சீரியலில் ஆதி குணசேகரனை அடக்கி ஆளும் கதாபாத்திரம் ஒன்று அறிமுகமாகிறது. ஆதி குணசேகரன் ஏமாற்றிய அந்த பெண்ணின் விதையாக இந்த கதாபாத்திரம் அமையுமா? என்பதை காண சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இவர், கோலங்கள் சீரியலில் ஆதியாக மிரட்டிய அஜய் கபூர் தான் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய வில்லனாக வருகிறார். இனி சீரியலில் வரும் ஒவ்வொரு எபிசோடும் அனல் பறக்கும் என சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |