முக கருமை என்ன செய்தாலும் மாறவில்லையா? அப்போ இந்த க்ரீம் பூசுங்க- தீர்வு நிச்சயம்
பொதுவாக சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள், வெள்ளையாக சில புள்ளிகள் காணப்படும்.
இது அவர்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதனை “ ஹைப்பர் பிக்மென்டேஷன்” என்று சரும பரிசோதனை மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இது போன்ற பிரச்சினைகள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன.
இந்த கரும்புள்ளிகள் எளிதில் முகத்திலிருந்து இல்லமலாக்க முடியாது. இதனால் பல பெண்களின் நம்பிக்கையை விட்டுட்டு வந்தால் வரட்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
அந்த வகையில் இப்படியான பிரச்சினையுள்ள பெண்கள் என்ன மாதிரியான கீரிம்கள் பயன்படுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கருமைக்கான ஒரே தீர்வு
பொதுவாக பெண்களுக்காக செய்யப்படும் அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாது சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து சேர்க்கிறார்கள். “ மெலனின்” என அழைக்கப்படும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் போது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது.
இது போன்ற வேளைகளில் கோஜிக் அமிலம் கொண்ட கீரிம்களை பயன்படுத்தலாம். மேலும் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது.
கோஜிக் அமிலத்தின் நன்மைகள்
1. முகத்திலுள்ள கருமையை எளிதில் போக்கும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உள்ளது. இதனை கருமையுள்ள இடங்களில் தடவினால் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். இது முகத்திலுள்ள டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின் உற்பத்தியை தடுக்கும். இதன் பயன்பாட்டின் விளைவாக முகம் பிரகாசிக்கும்.
2. வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஒரு வகை கருமை உண்டாகும். இதனை கோஜிக் அமிலம் இல்லாமலாக்குகின்றது. பயன்பாட்டின் பின்னர் கருமையடைந்த முகத்தில் பிரகாச ஒளி நிலைத்திருக்கும்.
3. பூஞ்சை போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகளை கோஜிக் அமிலம் குணப்படுத்துகின்றது. கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இது போன்ற கீரிம்கள் பயன்படுத்தும் போது மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துவது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |