கொடைக்கானலில் சுத்திப் பார்க்க வேண்டிய இடங்கள் இவ்வளவு இருக்கா? கண்டிப்பாக சென்று பாருங்க!
பொதுவாக இந்தியாவிலுள்ளவர்கள் அதிகமாக சுற்றுலா பயணம் செல்லும் இடங்களில் கொடைக்காணலும் ஒன்று.
இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளதால் அதிகமாக இயற்கை விரும்பிகள் இங்கு அடிக்கடி வருகை தருகிறார்கள்.
மேலும் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அழைக்கிறார்கள். கொடைக்கானல் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அத்துடன் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ள கொடைக்கானலைச் சுற்றி, பரப்பர் மற்றும் குண்டர் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன.
அந்த வகையில் கொடைக்காணல் சென்றால் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. கோக்கர்ஸ் வாக்
இந்த இடமானது கொடைக்கானல் ஏரியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தடவை சென்று விட்டால் கொடைக்காணல் வரும் போதெல்லாம் சென்று பார்க்க தோன்றும்.
2. பியர் ஷோலா நீர்வீழ்ச்சி
குறித்த நீர்வீழ்ச்சியானது காப்புக் காட்டிற்குள் அமைந்துள்ளது. வாகனங்களில் சென்றால் சுமாராக 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் மேற்குறிப்பிட்ட பெயரால் அழைக்கிறார்கள்.
3. கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் நகரில் இது தான் மிகப்பெரிய ஏறியாக இருக்கின்றது. சரியாக பார்த்தால் 24 ஹெக்டரில் இந்த ஏறி அமைந்துள்ளது. படகினால் தான் அந்த ஏறி சுற்றி பார்க்க முடியும். ஆகையால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள்.
4. தற்கொலை முனை
”தற்கொலை முனை ” இந்த இடத்தை நேரில் சென்று பார்ப்பது மிகவும் ஆபத்தானது. இதன் ஆழம் சரியாக 5000 அடி இருக்கும். மேலும் கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
5. செண்பகனூர் அருங்காட்சியம்
இந்த அருங்காட்சியம் பல வருடங்கள் சுற்றுலாத்தலமாக இருந்து வருகின்றது.இங்கு பல அரிய வகை பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்லும் குழந்தைகள் இருந்தால் இங்கு தாராளமாக செல்லலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |