சொல்றதை கேட்காம தொடர்ந்து மனைவிக்கு சாட் செய்த நண்பர் - பின்னர் நடந்த அதிர்ச்சி காரணம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கார்த்திக்கிற்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய நாதன் என்பவருக்கும் சமீபத்தில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. சத்திய நாதனை தனது வீட்டிற்கு அழைத்துவரும் அளவுக்கு இருவரும் நெருங்கி பழகிவந்ததாக தெரிகிறது.
இதனால், சத்திய நாதன் கார்த்திக் மனைவியிடம் செல்போன் மூலமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. போன்கால், சாட்டிங் என இருவரும் பேசி வந்ததாகவும் இதனால் கோபமடைந்த கார்த்திக் இருவரையும் கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், விடாமல் பேசி வந்திருக்கின்றனர். தொடர்ந்து கோபமடைந்த கார்த்திக் நேற்று வெளியே சென்றிருக்கிறார். அப்போது, சத்திய நாதனை இருசக்கர வாகனத்தை ஓட்டச் சொல்லிய கார்த்திக், பின்புறம் அமர்ந்திருக்கிறார்.
பின்னர், வாகனம் சென்றுகொண்டிருந்த வேளையில், ஆள் நடமாட்டம் இல்லாததை கவனித்த கார்த்திக், சத்திய நாதனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சத்திய நாதன், அங்கிருந்த தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறார்.
பின்னர், தகவலறிந்த போலீசார் சத்திய நாதனை மருத்துவமனையில் அனுமதித்த பின், கார்த்திக்கை கைது செய்துள்ளனர். இதுகுறித்து தொடர் விசாரணையும் நடைப்பெற்று வருகிறது.