மதுபானம் அருந்தாவிட்டாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம் காரணம் என்ன?
நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் நமது உடல் பாகங்களும் பாதுகாப்பாக இருக்கும்.
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது.
கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அந்த வகையில் நமது கல்லீரல் பாதிக்கப்படும் காரணங்கள் என்ன என்பதை இந்த பாிவில் பார்க்கலாம்.
கல்லீரல்
இது செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதி சரியாக செயல்படாதபோது, கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைகிறது. இந்த கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேரும். இப்படி வயிற்றைச் சுற்றி கொழுப்புச் சேர்வது கல்லீரல் நோயின் அறிகுறியாகும்.
எனவே இரண்டு முதல் மூன்று மாதங்களில் திடீரென எடை அதிகரிப்பு அல்லது அதிக எடை அதிகரிப்பு கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். முகத்தில் பருக்கள் வருவது கல்லீரல் கொழுப்பு சேர்ந்த தால் தான்.கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகள் முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கும்.
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு திடீரென பருக்கள் வரும். கல்லீரல் கொழுப்பை உடைக்காதபோது, அதில் உள்ள நச்சுகள் தோல் வழியாக வெளியேற முயற்சிக்கும்.
பின்னர் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த அறிகுறி உங்களுக்கு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். நமது தோல் இருந்த நிறந்தை விட தோல் கருமையாவதோடு , கழுத்து, அக்குள் மற்றும் முழங்கைகள் கடுமையாக கருமையாகிறது.
இந்த கருப்பு நிறம் இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக உள்ளது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்புடைய அறிகுறியாகும். எனவே தோல் நிறம் மாறும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
இரத்த சிவப்பணுக்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பிலிரூபினை கல்லீரல் சரியாக வடிகட்டவில்லை என்றால், தோல் மற்றும் கண்கள் நிறமாற்றம் அடையும். எனவே கண்களில் தோல் நிறம் மாறினால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.
கல்லீரல் அழற்சியின் காரணமாகவோ அல்லது கொழுப்பு திரட்சியின் காரணமாகவோ இருக்கலாம். கொழுப்பு சேரும் போது, கல்லீரல் வீங்கிவிடும். அப்போது வலி அதிகமாகும். எலும்பு வலி போலவும் உணரலாம். எனவே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |